Sanathanam Meaning In Tamil

Sanathanam translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

பொருள்

சனாதனம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு நித்தியமானது, காலத்தால் அழியாதது என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் என்பார்கள். இந்த கோட்பாடுகள் சாதி, மதம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொருந்தும். நேர்மை, உயிர்களை காயப்படுத்தாமல் இருத்தல், தூய்மை, நல்லெண்ணம், கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, துறவு போன்ற நற்பண்புகள் ஆகியவை பொதுக் கடமைகளில் அதாவது சனாதான தர்மத்தில் அடங்கும்

உதாரணமாக

இயற்கையாக ஏதோ ஒரு படைப்பு எப்படி இருக்கிறதோ அது அதன்பாலே இருப்பதை போலவே நாம் நம் வாழ்க்கையை வாழ்வதே சனாதன தர்மமாகும்.


1. சூரியனின் தர்மம் பிரகாசிப்பது, சந்திரனின் தர்மம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பது.


2. மரங்களின் தர்மம் வளர்ந்து நிழல் தருவதும், பூக்களின் தர்மம் மலர்ந்து மகரந்தச் சேர்க்கையை ஈர்ப்பதும் ஆகும்.. 


இதே போல் ஒவ்வொரு மனிதனும் தனக்கான தர்மத்தை நிலைநாட்டவேண்டும். இவ்வாறே ஒரு மனிதன் உலகின் நல்வாழ்வுக்கு பங்களிக்க முடியும் மற்றும் மோட்சத்தை அடையமுடியும் என்பதை இந்த சனாதான தர்மம் விளக்குகிறது.

Image

வாக்கியம்

சனாதான தர்மம் என்பது தனிநபர்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளை கடைபிடிக்க தெய்வீக ஆன்மீகத்தின் மூலம் தெரிவிக்கப்படும் ஒரு தத்துவக் கருத்து.